குறிப்பு:இணயத்தளத்தின் புதிய வசதிகள் - நட்சத்திரம் பொருத்த மற்றும் பல அம்சங்கள் ...

வடஆற்காடு மாவட்ட வன்னியகுல சத்திரிய சங்கம்

பல்லவன் கல்வியியல் கல்லூரி - வேலூர்

நாட்டின் முன்னேற்றத்தில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். தரமான ஆசிரியர்களை உருவாக்க சங்கம் தீர்மானித்தது,பின்னர் பல்லவன் கல்வியியல் கல்லூரியானது துவங்கப்பட்டது. இவ்வண்ணம் கல்லூரி துவங்க சிறப்பாக இயங்க பேருதவி புரிந்த பெருமை பேரா DR.KG.தஞ்சி அவர்களை சாரும். உடன் பேரா.M.தாமோதரன் அவர்களும் துணை புரிந்துள்ளார்.

வேலூர் பாரதியார் சாலை எண்.01-ல் அமைந்துள்ள சங்க தலைமை கட்டிடத்தில் 2006-2007 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்த பல்லவன் கல்வியியல் கல்லூரி, மேல்மொணவூரில் கல்லூரிக்கென புதியதாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ள இக்கல்லூரி கட்டிடம் வலிவாகவும், பொலிவாகவும் திகழ பொறியாளர் S.சின்னதம்பி அவர்கள் பெரிதும் துனைபுரிந்துள்ளார்கள். இக்கல்லூரியானது உள்கட்டமைப்பு மற்றும் ஆய்வுக்கூட வசதிகள் நிறைந்தும், நல்ல இயற்கை சூழலையும், நல்ல அனுபவமும், திறமையும் உடைய பேராசிரியர்களையும் கொண்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் பல்கலை கழகத்தின் தொடரிணைவும், NCTE இன் அங்கீகாரமும் பெற்று இயங்கும் இக்கல்லூரியில் ஆண்டுதோறும் நூறு பட்டதாரி ஆசிரிய மாணவ, மாணவியர் பயின்று வருகிறார்கள். தரமான ஆசிரியர்கள் மட்டுமே உயர்ந்த கல்வியை அளிக்க இயலும் என்பதை இங்கு பயின்ற மாணவ, மாணவியர் நிருபித்துள்ளனர்.

ஆசிரியர் கல்வி மட்டுமின்றி, பயிலுகின்றவர்களின் திறமையை மேலும் அதிகரிக்கும் வகையில் யோகா பயிற்சியும், கணினி பயிற்சியும் அளிக்கப்பட்டு அதற்கான சான்றுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இயற்கை சூழலோடு அமைதி தவழும் கல்லூரியாக இது விளங்குகின்றது. நமது பிள்ளைகளை குறிப்பாக பெண் பிள்ளைகளை பாதுகாப்புமிக்க இக்கல்லூரியில் சேர்த்து நல்ல பட்டதாரி ஆசிரியர்களை உருவாக்க நம்மக்கள் இக்கல்லூரியை பயன்படுத்துவார்களாக.

பல்லவன் கல்வியியல் கல்லூரி தோன்றுவதற்க்கு காரணமாக இருந்தவர் அமரர். R. மார்கபந்து EX.MP., என்பது குறிப்பிடத்தக்கது.