குறிப்பு:இணயத்தளத்தின் புதிய வசதிகள் - நட்சத்திரம் பொருத்த மற்றும் பல அம்சங்கள் ...

வடஆற்காடு மாவட்ட வன்னியகுல சத்திரிய சங்கம்

பல்லவன் தொழிற்பயிற்சி மையம் - ஆற்காடு

ஏழை, எளிய, பின் தங்கிய மாணவர்களுக்கு தொழிற்கல்வியானது சுயமாக ஒரு தொழிலைத் தொடங்கவும், வேலை வாய்ப்பு பெறவும் உதவுகிறது. இந்த அடிப்படையில் 1982-ல் DRAFTS MAN CIVIL & DRAFTS MAN MECHANICAL ஆகிய இரு பிரிவுகளுடன் தாஜ்புரா சாலையில் பல்லவன் ஐடிஐ தொடங்கப்பட்டது. தற்போது ELECTRICIAN மற்றும் FITTER ஆகிய பிரிவுகளுடன் செயல்படுகிறது. தொழிற்பயிற்சி மையத்திற்கான கட்டிடம் கட்டுவதற்கு தேவையான நன்கொடை வசூலிப்பதில் முனைப்பு காட்டியவர்கள் முன்னாள் தலைவர் திரு.B.முனிரத்தின நாயகர், அமரர்.R.மார்கபந்து EX.MP, திரு.K.A.சங்கரசிவம் (ADVOCATE). மற்றும் ஆற்காடு உறவினர்கள் ஆவார்கள். இந்த ஐடிஐ ஆரம்பிப்பதற்க்கும், சிறப்பாக செயல்படுவதற்கும், திரு.பாலசுப்பிரமணியம் அவர்களும், அமரர்.ஜோதிநாதன் அவர்களும், சங்க நிர்வாகிகளுடன் தங்களை பெரிதும் அர்ப்பணித்து கொண்டுள்ளார்கள். இங்கு பயின்ற மாணவர்கள் BHEL போன்ற பெருநிறுவங்களில் பணியில் சேர்ந்து பலனடைந்துள்ளர்கள். நமது பிள்ளைகள் தொழில் வல்லுனர்களாகவும் சொந்த நிறுவனங்கள் தொடங்கவும் அதன் மூலம் பிறருக்கு வேலை வாய்ப்பளித்து தானும் தொழிலதிபராகும் வாய்ப்பை நல்குகின்றது. வாய்ப்பை பயன்படுத்தி நமது இளைஞர்கள் தொழில் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயனடைவீர்களாக.