குறிப்பு:இணயத்தளத்தின் புதிய வசதிகள் - நட்சத்திரம் பொருத்த மற்றும் பல அம்சங்கள் ...

வடஆற்காடு மாவட்ட வன்னியகுல சத்திரிய சங்கம்

திருமணம் தகவல் மையம் - வேலூர்

வடாற்காடு மாவட்ட வன்னிய குல சத்திரிய சங்கத்தின் மற்றொரு அங்கமான திருமண தகவல் மையம் நமது உறவினர்களின் பிள்ளைகளுக்கும், பெண்களுக்கும் திருமணங்கள் சிரமமின்றி எளிதில் முடிய டிசம்பர் 2002-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த மையம் துவங்க காரணமாக இருந்தவர் பேரா.M.தாமோதரன் என்பது குறிப்பிடத்தக்கது. புதன்கிழமையிலிருந்து திங்கட்கிழமை வரை பிற்பகல் 2.00 முதல் 5.30 மணிவரை சங்க தலைமையிடத்தில் வரன்கள் பதிவும் கோப்புகள் பார்வையும் நடைப்பெறுகின்றன. இந்த மையத்திற்கு செவ்வாய்க்கிழமை விடுமுறையாகும்.

மாதந்தோறும் முதல் ஞாயிறு தினத்தன்று நடைபெறும் பெற்றோர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது பெற்றோர்கள் ஒருவரோடு ஒருவர் நேருக்கு நேர் கலந்து பேசவும், ஜாதக பரிமாற்றங்கள் செய்யவும் வாய்ப்பு ஏற்படுகிறது. ஆண்டுதோறும் இரண்டு முறை சுயம்வரங்கள் நடத்தப்படுகின்றன.

வரன்கள் பற்றிய குறிப்புகள் அடங்கிய மாத இதழான "பல்லவன் செய்தி மடல்" மாதந்தோறும் வரன்களுக்கு தபால் மூலம் அனுப்பப்படுகிறது. இப்பணியை செவ்வனே மேற்கொண்டு வரும் காரியக்கமிட்டி அங்கத்தினர் திரு.கலைமணி மற்றும் மையம் சிறப்புற ஈடுபாடு காட்டி வரும் பொதுக்குழு உறுப்பினர்கள் திரு.பொன்குப்பன் மற்றும் திரு.T.பரந்தாமன் ஆகியோரின் சேவை பாராட்டுதலுக்கு உரியதாகும்.

மையத்தின் செயல்பாடுகள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. 06.08.2017 அன்று நடைபெற்ற நமது சங்க நூற்றாண்டு விழாவின் போது திரு.M.கிருஷ்ணசாமி EX.MP அவர்களால் புதியதாக துவக்கி வைக்கப்பட்ட இணையதளம் WWW.VANNIYARPALLAVANMATRIMONIAL.COM-ன் வாயிலாக அவரவர் இல்லங்களிலிருந்தே அவரவர்களுக்குத் தேவையான வரன்களை தேர்ந்தெடுத்துக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சேவை மனப்பான்மையுடன் இயங்கும் இந்த மையத்தின் வாயிலாக ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்று உள்ளன.