குறிப்பு:இணயத்தளத்தின் புதிய வசதிகள் - நட்சத்திரம் பொருத்த மற்றும் பல அம்சங்கள் ...

வடஆற்காடு மாவட்ட வன்னியகுல சத்திரிய சங்கம்

பல்லவன் மெட்ரிகுலேஷன் பள்ளி - ஆற்காடு

தாஜ்புரா சாலையில் உள்ள சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் பல்லவன் மெட்ரிகுலேஷன் பள்ளி 2002-ல் ஆரம்பிக்கப்பட்டது. இப்பள்ளியின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக விளங்குபவர் நல்லாசிரியர் AL.திருஞானம் என்றால் மிகையாகாது மேலும் ஆசிரியர்கள் திரு.ஜெயவேலு மற்றும் திரு.பூங்காவனம் ஆகியோரின் சேவை பாராட்டுதலுக்குரியது.

முதலில் இரண்டு ஆசிரியர்களையும் 25 மாணவர்களையும் கொண்டு ஐடிஐ வளகத்தில் செயல்பட்டு வந்த இப்பள்ளி, தற்பொழுது படிப்படியாக உயர்ந்து பள்ளிக்கென புதியதாகக் கட்டப்பட்டுள்ள தனிக்கட்டிடத்தில் PRE.KG முதல் 10-ஆம் வகுப்பு வரை செயல்படுகிறது. இந்த பள்ளிக்கட்டிட கட்டுமான பணியில் நிர்வாகஸ்தர்கள் திரு.T.சந்திரன் அவர்களும் அமரர். ஆலப்பநாயகர் அவர்களும் முழுமையான ஈடுபாடு காட்டியுள்ளனர். உள் கட்டமைப்பு வசதிகள் கொண்ட இப்பள்ளியில் காற்றோட்டமான இடவசதி, பேருந்து வசதி, விளையாட்டு மைதானம் அமைந்துள்ளன. மேலும் மாணவர்களுக்கு யோகா பயிற்சி, கராத்தே, கணினி மற்றும் இந்தி கற்றுதரப்படுகிறது.

தாஜ்புரா சாலையில் உள்ள பல்லவன் கல்வி வளாகம் பசுமையாக திகழ திரு.பழனி கவுண்டர் அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.